திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி தற்கொலை

திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட பவித்ரா, செளந்தர்ராஜன்.

திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆர்.கே. பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மயிலாடும்பாறை கிராமத்தில் வசித்தவர் பவித்ரா (வயது 22 ).அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதனையடுத்து பவித்ரா வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் கொண்டாபுரம் காலனியை சேர்ந்த சௌந்தர்ராஜன் ( 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.

பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தார். பவித்ரா 5 மாத கர்ப்பிணி . இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சௌந்தரராஜன் வீட்டில் பவித்ராவும் சௌந்தர்ராஜனும் ஒரே சேலையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!