வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்
X
காக்களூரில் மழை நீரால் சூழப்பட்ட வீடு.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் வீடுகள் சுற்றி மழை நீர் சூழ்ந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக காக்களூரில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஊராட்சியில் உள்ள பூந்தோட்ட தெருவில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழை நீருடன் கூடிய கழிவுநீர் அப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் சுற்றி சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் காக்களூர் பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கையில் ஒவ்வொரு மழைக்காலங்களில் தாங்கள் பகுதியில் இதே நிலைமை நீடித்து வருவதாகவும்,பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும், வட்டாட்சியரிடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினர்.


மேலும் இந்தத் தண்ணீர் வழியாக பலமுறை வீடுகளுக்குள் விஷம் நிறைந்த பாம்பு, பூரான், தவளை வருகிறது என்றும் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி கிடப்பதால் கடந்த முறை அப்பகுதியில் வசிக்கும் 5.க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதாகவும், இந்த மழை நீரால் வீடுகளுக்குள் நிம்மதியாக தூங்க முடியாமல் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதான முதியவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவமனைகளுக்கு இரவு நேரங்களில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்து வருவதாக இதனால் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும், தாங்கள் பகுதியில் இருக்கின்ற இந்த நிலைமையை கண்டும் இதுவரை ஊராட்சி மன்ற தலைவரும், வார்டு உறுப்பினர்களும் அந்தப் பகுதியில் வந்து ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றும் மழைக்காலம் வந்துவிட்டால் தாங்கள் பகுதி வெள்ளம் சூழ்ந்து தாங்கள் இருக்கின்ற பகுதி குளம் போல காட்சிகளுக்கும் என வேதனையுடன் தெரிவித்தனர்.

எனவே தற்போதாவது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்