பெரியபாளையம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

பெரியபாளையம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
X
பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், வணிகர்கள் பல்வேறு தரப்பு மக்கள் அவதி படுகின்றனர்

பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் வியாபாரிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், ராள்ளபாடி, குமரப்பேட்டை, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் மாதம் ஒரு முறை பராமரிப்பு என்ற பெயரில் நாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், இது மட்டுமல்லாமல் அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருவதால் இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் வயதான முதியவர்கள், குழந்தைகள் நோயாளிகள் மற்றும் மின்சாரத்தால் நடைபெறும் தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன.

இந்த மின்சார துண்டிப்பு குறித்து பொதுமக்கள் இலவச தொலைபேசி எண் மூலம் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை என கூறப்படுகிறது. எனவே மின்சாரத்துறை அவசர காலகட்டத்தின் போது முன்னெச்சரிக்கையாக தெரிவித்தால் பொதுமக்களுக்கு, வணிகர்களுக்கு, மின்சாதன பொருட்களால் இயங்கும் பணிகளை மாற்றி அமைத்துக் கொள்வார்கள் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சமீப காலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இதே நிலைமை நீடித்து வருகின்றது. இந்த அடிக்கடி மின்வெட்டு காரணத்தினால் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே இது போன்ற அறிவிப்பு இல்லாத மின்வெட்டால் பொதுமக்களும், மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளும், முதியவர்கள், படிக்கின்ற மாணவர்களும், குழந்தைகள் என பல்வேறு தரப்பு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு தடையில்லா மின்சாரம் வழங்க அந்தத் துறைக்கு முக்கியத்துவம் வழங்கியும், கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து வரும் நிலையில் இது போன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டால் அரசுக்கு அவ்வப் பெயர் ஏற்படும் நிலையம் உருவாகும்.எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் மின் வீட்டிற்கு என்ன காரணம் என அறிந்து அந்தப் பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
சேந்தமங்கலத்தில் அதிர்ச்சி..! மின் மோட்டார் கம்பி திருட்டு சம்பவம்  போலீசாரின் விசாரணை..!