வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது!
ஊத்துக்கோட்டை அருகே வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 85 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை அடுத்த பெரம்பூர் பகுதியில் கடந்த 22-ஆம் தேதி மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகைகள், 900 கிராம் வெள்ளி பொருட்கள், ₹1 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஊத்துக்கோட்டை காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.அதில், கொள்ளையர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பழுதாகி விடவே, அங்கிருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தை திருடி சென்றதும், பழுதான இரு சக்கர வாகனமும் திருட்டு பைக் என தெரியவந்ததால், காவல் துறையினர் விசாரனையை தீவிரப்படுத்தினர்.
அதில் திருவள்ளூர் அடுத்த தோமூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன், பூண்டி பகுதியை சேர்ந்த கேசவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பிரபாகரன் பாஜக பிரமுகர் என்பதும், இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவரிடம் இருந்து 85 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டு ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu