கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டை தடுக்க மக்கள் கோரிக்கை

கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டை தடுக்க மக்கள் கோரிக்கை
X

கரைகளை சேதப்படுத்தி மணல் அள்ளப்படுகிறது.

கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டை தடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அத்தங்கி காவனூர் ஊராட்சியில் சுமார் 4000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊராட்சிக்கு ஒட்டி கொசஸ்தலை ஆறு பாய்கிறது.

இந்த ஊராட்சிக்கு சொந்தமான சுடுகாடு பகுதியில் மணல் கொள்ளையர்கள் பட்ட பகல்களில் ஆற்றின் கறைகளை சேதப்படுத்தி அதிலிருந்து மணல் மூட்டைகளில் மூலம் மணல் நிரப்பி அவற்றை டிராக்டர், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மூலம் கடத்தி மூட்டை ஒன்று ரூ.100 மற்றும் 150 வரை பெரியபாளையம், கன்னிகைப்பேர், வெங்கல், பூச்சி அத்திப்பட்டு, அழிஞ்சுவாக்கம், உன்னிடம் பல பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் சிலர் தெரிவிக்கையில், அத்தங்கி காவனூர் ஊராட்சி சுடுகாட்டு பகுதியில் உள்ள கொசத்தலை ஆற்றின் கரைகளை உடைத்து மணல் கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து இரவு நேரங்களில் மற்றும் பட்டப் பகலில் ஆற்றின் மணல் திருடுவதாகவும், இந்தத் திருட்டை தடுக்க வேண்டும் வேண்டும் என்று வருவாய்த்துறைக்கும், காவல்துறைக்கும் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை என்றும். கரைகளை சேதப்படுத்துவதால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வெள்ள நீர் ஊருக்குள் தண்ணீர் வரும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

எனவே தற்போதாவது இந்த மணல் கொள்ளை ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!