ஆமூர் ஏரியில் சவுட்டு மண் எடுக்க தடை விதிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

ஆமூர் ஏரியில் சவுட்டு மண் எடுக்க தடை விதிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பொன்னேரி அருகே ஆமூர் ஏரியில் சவுட்டு மண் எடுக்க தடை விதிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி செங்குன்றம் அருகே உள்ள ஆமூரில் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலாக உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய மிகப்பெரிய ஏரியான ஆமூர் ஏரி உள்ளது.

இந்த ஏரியில் இருந்து விவசாயத்திற்கும், குடிநீருக்காக பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஆமூர் ஏரி ஒட்டிய பகுதியில் பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வரை 400.அடி சாலை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக இப்பகுதியில் உள்ள கோரைகளில் மண் எடுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு கூறியுள்ள மூன்று அடி என்னும் அளவைவிட சுமார் 20.அடிக்கும் மேலாக கோரை மண் மற்றும் மணல் அள்ளப்படுவதால் ஏரியின் நீர் இருப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுஉள்ளதாகவும் விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பொதுமக்கள் கோரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் எனவும் ஏரியில் நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்த பகுதி விவசாயிகள் கூறுகையில், சாலை பணிகளுக்காக ஏரியில் அதிக ஆழத்திற்கு பள்ளம் தோன்றி மண் எடுப்பதால் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் தண்ணீர் நிரம்பி பள்ளம் மேடு தெரியாத காரணத்தினால் மேய்ச்சலுக்கு செல்லும் செல்லப்பிராணிகளுக்கும் விளையாடும் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயமும். அதிக அளவில் பள்ளம் தோண்டி மணல் எடுப்பதால் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

எனவே இந்த சவுட்டு மண் வாரீர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!