ஏரியில் அதிக அளவில் மண் எடுப்பதாக பொதுமக்கள் போராட்டம்

ஏரியில் அதிக அளவில் மண் எடுப்பதாக பொதுமக்கள் போராட்டம்
X

பைல் படம்

மாளந்தூர் ஏரியில் அரசு விதிகளுக்கு புறம்பாக மண் அள்ளப்படுவதாக கிராம மக்கள் மண் குவாரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் கிராமத்தில் 33 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தோண்டான் ஏரி ஒன்று உள்ளது.

இந்த ஏரியில் சவுடு மண் குவாரி அமைத்து மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் தனிநபர் ஒருவருக்கு அனுமதி வழங்கி உள்ளது. எனவே, இந்த ஏரியில் 5-க்கும் மேற்பட்ட ஹிட்டாச்சி இயந்திரங்களைக் கொண்டு நாள்தோறும் பல நூறு லோடு லாரிகளில் மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில்,விவசாயி ஒருவர் பயிர் செய்து வரும் பட்டா நிலம் அருகே பல அடி ஆழத்துக்கு மண் அள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பட்டா நிலத்தில் உள்ள மண் அரிக்கப்பட்டு பெரும்பள்ளம் ஏற்படும். இதனால் விவசாயம் செய்ய இயலாது என்றும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் எனக் கூறி மாளந்தூர் ஊராட்சி மன்ற 2-வது வார்டு உறுப்பினர் விஜயா தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து குவாரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி கூறினர். இதனை ஏற்று அனைவரும் அமைதியாக கலந்து சென்றனர்.இப் பிரச்சினையால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில், தாங்கள் கிராமத்தில் உள்ள ஏரியில் மண் அல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும், அனுமதி பிரகாரம் நாள் ஒன்றுக்கு 150. லாரி லோடுகளும் மற்றும் ஏரியில் மூன்று அடி ஆயத்திற்கு மட்டும் மண் அல்ல அனுமதி அளித்துள்ளனர்.

இந்தநிலையில். விதிகளுக்கு புறம்பாக 8 அடி அளவில் பள்ளம் தோண்டப்பட்டு நாள் ஒன்றுக்கு சுமார் 500 லோடு அளவிற்கு லாரிகளில் மண் ஏற்றி செல்லப்படுகிறது. அளவுக்கு மீறி பள்ளம் எடுப்பதால் மழைக்காலங்களில் ஏறி நிரம்பினால் அவ்வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் செல்லப் பிராணிகளும், விளையாடச் செல்லும் மாணவர்களும் ஆபத்து சிக்கும் அபாயம் உருவாககி வருகிறது.

இந்த ஏரியை நம்பி சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான விளைநிலங்களில் இப்பகுதி விவசாயிகள் நெற்பயிர், மல்லி, கணக்காம்பரம், முல்லை, கத்திரி, வெண்டை உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

அதிக அளவில் மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும் என எனவே இந்த ஏரியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறி குவாரியை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!