திருவள்ளூர் அருகே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

திருவள்ளூர் அருகே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
X

திருவள்ளூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் அருகே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் விஸ்வநாதபுரம் கிராமத்தில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை, சிவன் கோவில் தெருவில் 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் நரசிங்கபுரம் கிராமத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேல் தேக்கம் குடிநீர் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள சென்மேரிஸ் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 44 செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவை முன்னிட்டு செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 6 முதல் பன்னிரண்டாம் வகுப்பு சேர்ந்த 110 மாணவர்கள் ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளாக விளையாடினர். இந்த விளையாட்டு போட்டியை திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாணவர்களுடன் அமர்ந்து செஸ் போட்டியில் விளையாடி போட்டிகளை துவக்கி வைத்தார்.

அதற்கு முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடிய மாணவிக்கு சட்டமன்ற உறுப்பினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் ஒன்றியச் செயலாளர் மோ.ரமேஷ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.இ.ஆதிசேசன், திருவள்ளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன், மப்பேடு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ, பள்ளி தலைமையாசிரியர்கள் சகாயமேரி, ஒன்றிய நிர்வாகிகள் கோபல், ரவி, காமராஜ், கீதாமுனுசாமி, சண்முகம், சாரதி, ராஜேந்திரன், ஜெபஸ்டின், பிரசன்னா குமார் , ஒன்றிய கவுன்சிலர் தயாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயந்தி மோகன், தமிழ்மொழி, ராஜி, துணைத்தலைவர் கதிர், மற்றும் ஏகாம்பரம், எம்.ஜி.ஆறுமுகம், சேகர், ரத்தினவேல், உள்பட கழக நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பள்ளியின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!