திருவள்ளூர் அருகே மரகத பூஞ்சோலை திட்டத்தின் கீழ் புதிய பூங்கா திறப்பு

திருவள்ளூர் அருகே மரகத பூஞ்சோலை திட்டத்தின் கீழ் புதிய பூங்கா திறப்பு
X

திருவள்ளூர் அருகே மரகத பூஞ்சோலை திட்டத்தின் கீழ் புதிய பூங்காவை கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

திருவள்ளூர் அடுத்த கெரக்கம்பாக்கம் ஊராட்சி பகுதியில் மரகத பூஞ்சோலை திட்டத்தின் கீழ் புதிய பூங்கா திறந்து வைக்கப்பட்டது.

திருவள்ளூர் அருகே முதலமைச்சரின் மரகத பூஞ்சோலை திட்டம் தொடக்க விழாவிற்கு தாமதமாக வந்தார் கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன். அவரை வரவேற்பதற்காக அரசு தொடக்கப்பள்ளி மாணவ,மாணவிகள் சுமார் 2 மணி நேரம் கடும் வெயிலில் காத்திருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி திருவள்ளூர் அருகே செங்குன்றம் வனச்சரகம் சார்பில் கெரக்கம்பாக்கம் ஊராட்சி பகுதியில் முதலமைச்சரின் மரகத பூஞ்சோலை திட்டத்தின் கீழ் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் 1 ஹெக்டர் பரப்பளவில் மரகத பூஞ்சோலை புதிய பூங்கா தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் டி.கே. சந்திரசேகர், ஜான் என்கிற பொன்னுசாமி, பேரிட்டிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்ட எம்எல்ஏ விற்கு வரவேற்பு கொடுப்பதற்காக அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். இந்த விழாவானது காலை 10 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மதியம் 12 மணி அளவில் தான் எம்எல்ஏ வந்ததால் பள்ளி மாணவ மாணவியர்கள் சுமார் 2 மணி நேரம் கடும் வெயிலில் காலணிகள் இன்றி கால் கடுக்க நிற்க வைக்கப்பட்ட அவலம் அரங்கேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!