ஊத்துக்கோட்டை: ரூ.70 லட்சம் மதிப்புள்ள காப்பர் ஒயர் திருடிய 9 பேர் கைது

ஊத்துக்கோட்டை: ரூ.70 லட்சம் மதிப்புள்ள  காப்பர் ஒயர் திருடிய 9 பேர் கைது
X
ஊத்துக்கோட்டை: ரூ.70 லட்சம் மதிப்புள்ள காப்பர் ஒயர் திருடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி அடுத்த குஞ்சலம் கிராம பகுதியில் 110 கிலோ வாட் அளவு கொண்ட மின்சார துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 25 தேதி அதிகாலை 3.30 மணியளவில் 70 லட்சம் மதிப்புள்ள 41/2 டன் மின்சார டிரான்ஸ் பார்மரில் பயன்படுத்தக்கூடிய காப்பர் ஒயர் மற்றும் உதிரி பாகங்களை மினி லாரியில் வைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இது குறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் பென்னலூர் பேட்டை காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 30 தேதி புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் தேடி வந்த நிலையில் பென்னலூர்பேட்டை அடுத்த ராமலிங்காபுரம் போலீஸ் சோதனைச்சாவடியில் மினி லாரி ஒன்றையும் சோதனை செய்தனர். அதில் காப்பர் ஒயர் 2 டன் இருந்தது சோதனையில் தெரிய வந்தது. ஆந்திர மாநிலத்திற்கு விற்பனை செய்வதற்காக மினி லாரியில் காப்பர் ஒயரை கடத்திச்சென்ற . திருத்தணியைச் சேர்ந்த இரும்பு கடை வியாபாரிகள் பெரியசாமி (35), ரத்தினசாமி (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, மினி லாரி மற்றும் காப்பர் ஒயரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய, முக்கிய குற்றவாளிகளை கடந்த 2 மாதங்களாக தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில். அரக்கோணம் காவனூர் பகுதியைச் சேர்ந்த மணவாளன் (43) ,வினோத்குமார் (32 ) சாம் ஜெபதுரை (32 )வின் பிரைட்(34) தக்ஷிணாமூர்த்தி (25) திருமலை (25)திருத்தணி அடுத்த வியாசபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (18) மோகன் (21) ராசு (17) ஆகிய 9 பேரை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!