வரவேற்கும் விதமாக நாடு முழுவதும் ஒரே தேர்தல்: முன்னாள் அமைச்சர் பேட்டி
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள நொச்சி குப்பத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் விஜியன் இல்ல காதணி நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கின்ற கொள்கையை வரவேற்பதாகவும் கடந்த காலங்களில் 1952 தேர்தல் நடைபெற்ற போது நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்த தருவாயில் சுமார் 11 கோடி மட்டுமே செலவானதாகவும், தற்போது நிலையில் சுமார் 60 ஆயிரம் கோடி தேர்தலுக்காக செலவாகும் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் கல்வித்துறை பெரிதும் பாதிக்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
உதாரணமாக தேர்தல் ஏப்ரல், மே ,மாதங்களில் தேர்தல் நடைபெறும் போது தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதிலும் பள்ளி கல்வித்துறைக்கும் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், மேலும் தேர்தல் அடிக்கடி நடைபெறுவதால். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் அடிக்கடி ஒவ்வொரு தேர்தலுக்கும் வந்து செல்வதால் அவர்களின் நேரம் விரயமாகும் எனவும் அதே நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுவதால் அவர்களது பயண சிரமமும் குறைக்கப்படும். என கூறினார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதிக பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றி பெறுவோம் என மு.க.ஸ்டாலினால் சொல்ல முடியாது எனவும், ஏனென்றால் விலைவாசி உயர்வு வரி உயர்வு தேர்தல் காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. காவல்துறைக்கு பாதுகாப்பில்லை எனவும் இவற்றை மக்கள் உணர்ந்ததாகவும் திமுக ஆட்சி விரைவில் மூட வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
எங்கு பார்த்தாலும் சாலைகளில் தேனும் பாலும் போடுவது போல மு .க .ஸ்டாலினும் அவரது மகனும் பேசுவதாகவும் கூறிய ஜெயக்குமார் நாட்டையே கொள்ளை அடித்திருப்பதாகவும் அதனால் பயம் எனவும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வரும்போது அரிய பெரும்பான்மையுடன் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் ஆட்சி அமைக்கும் என ஜெயக்குமார் கூறினார்.
திமுக எப்போதும் பாதியிலேயே மக்களிடம் செல்வாக்கை இழப்பது வாடிக்கையாகி உள்ளது. அது தற்போது நடந்துள்ளதாகவும் மேலும் மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணியில் இருப்பதாகவும். தமிழகத்தை பொறுத்தவரை எங்கள் தலைமையில் தான் பாஜக கூட்டணி உள்ளது என்றும் தெரிவித்தார்
ஓ.பி.எஸ் ஆல் எந்த தாக்கமும் ஏற்படாது ரஜினி அடுத்த படத்திற்கு புரட்சித்தலைவரின் வேடம் கேட்டு நடைபெறுவதாகவும். கேளிக்கையாக தொடர்ந்து ஓபிஎஸ் தெருமுனை கூட்டம் கூட நடத்தா வக்கில்லாத நிலையில் அவர் எப்போது பொதுக்கூட்டத்தை நடத்துவார் என காட்டமாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி. பலராமன், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ்.விஜயகுமார், ஒன்றிய, நகர உள்ளிட்ட திறமையான அதிமுக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu