திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி முதியவர் பலி

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி முதியவர் பலி
X
Latest Accident News- திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

Latest Accident News- திருவள்ளூர் ராஜாஜிபுரம் பெரியார் தெருவில் வசித்து வந்தவர் உத்ராபதி (வயது78).கூலித்தொழிலாளியான இவர் வேலை காரணமாக திருவள்ளூரில் இருந்து காக்கலூர் நோக்கி அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காக்கலூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த டிராக்டர் திடீரென மோட்டார் சைக்கிளின் பின்னால் வேகமாக மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த உத்ராபதி. நிலைதடுமாறி கீழே விழுந்து தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்திருத்துக் கொண்டிருந்தார்.

அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உத்ராபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story