மாடிப்படி ஏறும்போது தவறி விழுந்த முதியவர் பலி

மாடிப்படி ஏறும்போது தவறி விழுந்த முதியவர் பலி
X
திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் மாடிப்படி ஏறும்போது தவறி விழுந்த முதியவர் பலி.

திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவர் கடந்த 20ஆம் தேதி காலை 11 மணியளவில் வீட்டு மாடிப்படி ஏறும்போது தவறி கீழே விழுந்துள்ளார்.அப்போது தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சம்பவத்தன்று இறந்துவிட்டார்.

இதுகுறித்து அவரது மகள் ராதா என்பவர் மணவாளன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!