ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
X

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் வழங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த தினம் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் தலைமையில் திருவள்ளூரில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 65 பச்சிளம் குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜோஷி.அஸ்வின் குமார், மணவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு