திமுக வேட்பாளர் நாட் ரீச்சபிள்- பி.வி ரமணா கிண்டல்

திமுக வேட்பாளர் நாட் ரீச்சபிள்- பி.வி ரமணா கிண்டல்
X

திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பி. வி. ரமணா பேரம்பாக்கம் மார்க்கெட் பகுதியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான கட்சியினரிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் திமுக வேட்பாளரை நாட் ரீச்சபிள் என கூறினார்.

திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ரமணா திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட கடம்பத்தூர் ஒன்றியம், பூண்டி ஒன்றியம், திருவள்ளூர் நகரம், திருவலங்காடு ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடம்பத்தூர் ஒன்றியத்தில் திருவிழா கோலத்தில் இருந்த பேரம்பாக்கம் மார்க்கெட் பகுதியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் இடையே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பொழுது ஒரு குறிப்பிட்ட பகுதியில் திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளரான ரமணாவை தொகுதிக்கு வராத வேட்பாளர் என பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசின் சாதனைகளையும் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளையும் மக்களிடம் விளக்கி கூறி வாக்கு சேகரித்து வந்தேன். ஆனால் தொலைபேசியிலோ நேரிலோ காணமுடியாத நாட் ரீச்சபிள் நிலையில் உள்ளவர் திமுக வேட்பாளர். நேரிலும் தொலைபேசியிலும் எப்போதும் ரீச்சபிள் நிலையிலுள்ள அதிமுக வேட்பாளரான எனக்கு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!