வீட்டில் திருட முயன்ற வட மாநில இளைஞர்களுக்கு தர்ம அடி
திருவள்ளூர் நகர பகுதியில் அமைந்துள்ள மேட்டூர் தெரு இந்த பகுதியில் சுமார் 2000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நேற்று இரவு வட மாநிலத்தை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் மேட்டு தெரு எம்ஜிஆர் நகர் தந்தை பெரியார் சிலை ஆயில் மில் போன்ற தெருக்களில் வட மாநில இளைஞர்கள் நான்கு பேர் ஒரு வட மாநில பெண் மொத்தமாக ஐந்து பேரும் தெருக்களில் நோட்டமிட்டு வந்துள்ளனர்.
அதை தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள மேட்டு தெரு பகுதியில், இந்த வட மாநில கும்பல் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக அந்த தெருகளில் சுற்றி திரிந்துள்ளனர்.அந்த தெருவில் வசித்து வருபவர் தங்கராசு ஜானகி அவர் வீட்டுக்குள் உள்ளே அவர்கள் இருந்தது அறியாமல் வட மாநில இளைஞர் உள்ளே சென்றுள்ளனர்.
உடனே யார் என்று கேட்டதற்கு வடமாடு இளைஞர் அவர்களை தாக்க முயன்றதால் உள்ளே இருந்த நபர்கள் கூச்சலிட்டதனால் அருகில் இருந்த பொதுமக்கள் வட மாநில இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதைத்தொடர்ந்து நகர ஆய்வாளர் ஸ்டாலின் அந்தோணிக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஆம்புலன்ஸ் வரவைத்து வட மாநில இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போகும் வழியில் வட மாநில இளைஞர் ஆம்புலன்ஸ் கண்ணாடி மற்றும் செவிலியர் திருப்பதியை தாக்கி தப்ப முயன்றுள்ளனர்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும், முதலுதவி சிகிச்சையை பார்க்க வந்த செவிலியர் மற்றும் மருத்துவரை தாக்க முயன்றதால் அந்த இளைஞரை மருத்துவமனையில் இருந்த அரசு ஊழியர்கள் அவரைப் பிடித்து கால் மற்றும் கைகளை மருத்துவமனை கட்டிலில் கட்டி வைத்தனர்.
உடனடியாக தப்பிச் சென்ற நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் வாழும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் உடனடியாக இதுபோல சம்பவங்கள் தவிர்க்க காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu