காக்களூர் ஆவின் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு

காக்களூர் ஆவின் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு
X

உயிரிழந்த உமா மகேஸ்வரி.

திருவள்ளூர் காக்களூர் ஆவின் பால் தொழிற்சாலையில் பணியின் போது பெண் ஒருவர் இயந்திரத்தில் சிக்கி தல துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆவின் தொழிற்சாலையில் பணியின் போது இயந்திரத்தில் பெண்ணின் தலை முடி சிக்கியதால் தலை துண்டாகி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 90.ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு,மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம்போல் பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வந்தது.

அப்போது பால் உற்பத்தியாகி பாக்கெட்டுகள் வெளியே வரும்போது அதனை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த கார்த்தி என்பவரது மனைவி உமா மகேஸ்வரி( வயது 30).என்பவர் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது தலைமுடி இயந்திரம் அருகில் உள்ள மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. இதனால் உமா மகேஸ்வரியின் தலை அந்த மோட்டாரில் சிக்கிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை மாட்டிக் கொண்டது. இதனால் தலை துண்டாகி நிகழ்வு இடத்தில பரிதாபமாக உயிர்ழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கணவர் கார்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும். காக்கலூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி உமா மகேஸ்வரி ஆவின் பால் பண்ணைக்கு கடந்த 6 மாதகாலமாக வேலைக்கு வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காக்களூர் பால் பண்ணையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் ஆவின் பால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு