ரமலான் பண்டிகையொட்டி ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!

ரமலான் பண்டிகையொட்டி ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!
X

ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்கள் 

இன்று ரமலான் பண்டிகை முன்னிட்டு திருவள்ளூர் ஈத்கா மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை செய்தனர்.

ரமலான் பண்டிகையையொட்டி திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களின் இரண்டு முக்கிய பண்டிகைகள் உள்ளன. ஒன்று ரமலான் மற்றொன்று பக்ரீத் பண்டிகையாகும்.ரமலான் பண்டிகை ஒரு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் முதல் பிறை தென்பட்டவுடன் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க தொடங்குகின்றனர்.

இஸ்லாமியர்களின் நோன்பு என்பது சூரிய உதயத்திற்கு முன்னர் சுமார் அதிகாலை நாலு மணிக்குள் உணவை உண்டு விட்டு நோன்பு நோற்று மாலை சூரியன் மறைந்த பின்னர் நோன்பு திறப்பது வழக்கம் ஆகும்.அந்த இடைப்பட்ட நேரத்தில் தண்ணீர் கூட பருகக் கூடாது என்று முழுமையாக கட்டுப்பாட்டுடன் நோன்பை நோற்க்கின்றனர்.இந்த நோன்பு மூலம் பசித்து இருப்பதும், தாகித்திருப்பதும், பல்வேறு தீய செயல்களில் இருந்து விடுபட்டு மன கட்டுப்பாட்டை கொண்டு வருவதும் இந்த நோன்பின் சிறப்பம்சமாகும்.

மேலும் நோன்பு இருப்பதன் மூலம் ஏழைகளின் பசி அறிந்து அவர்களுக்கு உதவுவது. இந்த மாதத்தில் அதிக அளவு ஜகாத் எனப்படும் தானம் செய்தல் இஸ்லாமியர்கள் மீது கடமையாகும்.30 நோன்பு முடிந்த நிலையில் மீண்டும் வளர்பிறை தென்பட்டவுடன் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகையொட்டி திருவள்ளுர் டோல்கேட்டில் உள்ள ஜாமியா மசூதிக்கு சொந்தமான ஈத்கா மைதானம் என்னும் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Next Story
future ai robot technology