நீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழப்பு..!

உயிரிழந்த சிறுவர்கள் கவின் மற்றும் வெற்றி (பழைய படம்)
பெரியபாளையம் அருகே மெய்யூர் கிராமத்தில் ஏரியில் மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜுவ் காந்தி இவரது மகன் வெற்றி( வயது 8) அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் என்பவரது மகன் கவின் ( வயது 6) அதே பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தான்.இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சிறுவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன்பிடிப்பதற்காக சென்று உள்ளனர்.இந்த நிலையில் சிறுவர்கள் இருவரும் தண்ணீரில் இறங்கிய போது, நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உள்ளனர்.
அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் இது குறித்து சிறுவன் ஒருவனின் தந்தைக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்ததை தொடர்ந்து அங்கு வந்த கிராம மக்கள் நீரில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவர் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்க சென்றபோது சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்
பாலி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் எங்கு செழிக்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்களை நீர்நிலைகளுக்கு செல்லாமல் இருப்பதற்கு அவர்களுக்கு பெற்றோர் எச்சரிக்கை செய்யவேண்டும். இந்த இரண்டு சிறுவர்களின் உயிரிழப்பு எல்லா பெற்றோருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.
அருகில் நூலகம் இருந்தால் சிறுவர் கதைகளை படிப்பதற்கு பெற்றோர் வழிகாட்டலாம். வாசிப்பு குழந்தைகளை சிந்திக்க வைப்பதுடன் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்க உதவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu