இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

விபத்தில் இறந்த குணசேகரன்.
இருசக்கர வாகனம் மீது சவுடு மண் ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை ரெட்டி தெருவில் வசித்து வந்தவர் குணசேகரன்(வயது 65 ). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவர் முன்னாள் கவுன்சிலர் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச்செல்லும் குருசாமி ஆவார். இவர் நேற்று காலை தனது மொபட்டில் வேலை செய்வதற்காக பாலவாக்கம் நோக்கி சென்றார்.
அப்போது தொம்பரம்பேடு பகுதியில் இருந்து சவுடு மண் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இவரின் பின்னால் மோதியது இதில் குணசேகரன் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அதே லாரி குணசேகரின் தலைப்பகுதியில் ஏரி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவயிடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
விபத்தில் பலியான குணசேகரனுக்கு யசோதா ( வயது65 ) என்ற மனைவியும், மணிகண்டன், நவீன்குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர். அப்பகுதியில் இயங்கி வரும் சவுடுமண் குவாரியில் இருந்து சவுடு மண் ஏற்றிக்கொண்டு நாள் ஒன்றுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட லாரிகள் இவ்வழியாக மின்னல் வேகத்தில் செல்வதாகவும், இதனால் கிராம மக்களும் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க அச்சப்படுவதாகவும், போட்டி போட்டுக் கொண்டு லாரிகள் மின்னல் வேகத்தில் செல்வதால் இதுபோன்று நடைபெறுவதாகவும் இந்த சவுடு மண் குவாரியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu