வடசென்னையில் அனல் மின் நிலைய மூன்றாவது பிரிவு..! முதலமைச்சர் திறந்து வைத்தார்..!

வடசென்னையில்  அனல் மின் நிலைய மூன்றாவது பிரிவு..! முதலமைச்சர் திறந்து வைத்தார்..!
X

800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அத்திப்பட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட வடசென்னை அனல் மின் உற்பத்தி நிலையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வட சென்னை மின் நிலையம்: தமிழ்நாட்டின் புதிய சாதனை!

தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வட சென்னை அனல் மின் நிலையத்தின் 3வது நிலை 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் இன்று திறக்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

குறைந்த நிலக்கரி, அதிக மின்சாரம்: 450 கிராம் நிலக்கரியை கொண்டு 1 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

சுற்றுச்சூழல் நட்பு: இயற்கை முறையில் நீர் குளிரூட்டும் கோபுரம் மூலம் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. குறைந்த மாசு வெளியேற்றம்.

திறப்பு விழா:

ரூ.10158கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட வட சென்னை மிக உய்ய மின் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். குறைந்த நிலக்கரியை கொண்டு அதிக மின் உற்பத்தி. குறைந்த மாசு, இயற்கை முறையில் குளிரூட்டும் தொழில்நுட்பங்கள்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 800 மெகாவாட் மின் உற்பத்தி திறனில் விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் திட்டமிடப்பட்டது.

தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 10ஆண்டுகளாக மந்த கதியில் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க 3வது நிலை பணிகள் நடைபெற்று வந்தன. 2021ல் திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் இந்த திட்டம் தொடர்பாக கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பணிகளை முடித்து திட்டத்தை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதின் பேரில் கட்டுமான பணிகள் முடுக்கி விடப்பட்டன.

10158 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடசென்னை மிக உய்ய அனல் மின் நிலைய 3வது நிலை கட்டுமான பணிகள் நடைபெற்று முடிவடைந்தது. 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அனல் மின் நிலையத்தில் சோதனை அடிப்படையில் கொதிகலனில் நிலக்கரி எரியூட்டப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் இந்த அனல் மின் நிலையத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மின் உற்பத்தியை தொடங்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் முதல் முறையாக குறைந்த அளவிலான நிலக்கரியை கொண்டு அதிகபட்ச மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் கொண்ட மிக உய்ய மின் நிலையம் இங்கு நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் முதல் மிக உய்ய அனல் மின் நிலையமான இங்கு 450 கிராம் நிலக்கரியினை கொண்டு 1 யுனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வகையில் தொழில்நுட்பம் அமைந்துள்ளது.

மேலும் இயற்கை முறையில் நீர் குளிரூட்டும் கோபுரம் மூலம் தண்ணீர் வெளியேற்றமின்றி மறுசுழற்சி செய்யப்பட உள்ளது. குறைந்த மாசு வெளியேற்றும் வகையில் சுற்றுச்சூழல் நட்புணர்வு வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், 765 கி.வோ வலிம காப்பு துணை மின் நிலையம் அமைக்கப்பட்ட முதல் அனல் மின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, காந்தி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகர், டி.ஜெ.கோவிந்தராசன், எம்பி ஜெயக்குமார், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோடை காலம் தொடங்கவுள்ள சூழலில் அதிகரிக்கும் மின் தேவையை இந்த அனல் மின் நிலையம் பூர்த்தி செய்யும் என மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!