புதிய கிளை நூலக கட்டிடம் திறப்பு விழா :முன்னாள் அமைச்சர் பங்கேற்று துவக்கம்

புதிய லைப்ரரி கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் நாசர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
New Library Building Opening Ceremony
திருவள்ளூர் அருகே ரூபாய் 67.50 லட்சம் மதிப்பீட்டில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு புதிய கிளை நூலக கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான ஆவடி .நாசர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றிதிறந்து வைத்தார்.
New Library Building Opening Ceremony
திருவள்ளூர் அருகே ரூபாய் 67.50 லட்சம் மதிப்பீட்டில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு புதிய கிளை நூலக கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான ஆவடி நாசர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
பூவிருந்தவல்லி தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் ஒன்றியம் காக்களூரில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றமேம்பாட்டு நிதிமற்றும் மாவட்ட நூலக நிதிலிருந்து ரூபாய் 67.50 லட்சம் மதிப்பீட்டில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு புதிய கிளை நூலக கட்டிடம் திறப்பு விழாவானது ஒன்றிய கவுன்சிலர் த.எத்திராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ கலகட்டிடத்தை திறந்து வைத்து கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. முன்னிலையில் நூலகத்தை பார்வையிட்டார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர்ஜெரால்டு, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், மாவட்ட கவுன்சிலர் தென்னவன், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu