திருவள்ளூரில் புதிய பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழா:எம்எல்ஏ கலெக்டர் பங்கேற்பு

New Building Construction Boomi Pooja திருவள்ளூரில் 7.50 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடத்திற்கான அடைக்கல் நடும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினார்.

New Building Construction Boomi Pooja

திருவள்ளூர் மாவட்டம், ராஜாஜி சாலை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆனது தொடக்கப்பள்ளி கட்டடத்துடன் இணைந்து இயங்கி வருவதால் பள்ளி மாணவர்கள் கடும் இட நெருக்கடியில் பயின்று வருகின்றனர்,

மேலும் இப்பள்ளியில்மாணவர்களுக்கு ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானமும் போன்ற அடிப்படை வசதிகள் ‌ இல்லாத ஒரு சூழ்நிலையில் 600 மாணவர்கள் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர்,இந்த நிலையில் இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஜி.முரளிதர்,மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன்,நகர்மன்ற தலைவர் உதயமலர்- பொன். பாண்டியன் ஆகியோரிடம் புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

New Building Construction Boomi Pooja



இதனைத் தொடர்ந்துதிருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான 80.சென்ட் நிலம்மானது திருவள்ளூர் வட்டாட்சியர்

அலுவலகம் அருகே உள்ளஇடத்தை நகராட்சி நிர்வாகம் பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது‌, அதில்

50 சென்ட் நிலத்தில் பள்ளி கட்டுவதற்காகவும் மீதமுள்ள 30 சென்ட் நிலம் விளையாட்டு மைதானமாக

கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது‌.

இதன் முதல் கட்டமாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்50.லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நகர் மன்ற தலைவர் உதய மலர் பொன்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன்,மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், நகராட்சி ஆணையர் சுபாஷினி, பள்ளியின் தலைமை ஆசிரியர் முரளிதர் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து‌ அடிக்கல் நாட்டினர். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story