நெடுவரம்பாக்கம் அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கல்யாணம்

நெடுவரம்பாக்கம் அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கல்யாணம்
X

நெடுவரம்பாக்கம் அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற சிவபெருமான் பார்வதி திருக்கல்யாணம் 

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெடுவரம்பாக்கம் அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெடுவரம்பாக்கம் அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற சிவபெருமான் பார்வதி திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று எம்பெருமானை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் திருக்கோவில் அமைந்துள்ளது.

வட அண்ணாமலை என போற்றப்படும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிவபெருமான் பார்வதி திருக்கல்யான வைபவம் நடைபெற்றது. முன்னதாக அண்ணாமலையாருக்கும் அபிதகுஜாம்பாள் அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதையடுத்து கிராமதேவதை சாந்தவள்ளியம்மன் கோவிலிலிருந்து மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் சீர்வரிசை பொருட்களை நுற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொண்டு வந்து சேர்த்தனர்.

இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மாலை மாற்றுதல் வைபவம் நடந்தேறியது. பின்னர் கெட்டிமேளம் முழங்க பார்வதி தேவிக்கும் கௌரி தாயாருக்கும் ஆகம முறைப்படி மங்கலநாண் சூட்டப்பட்டது.


இத்திருமண காட்சியை அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கண்குளிர கண்டு மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து நறுமண திரவியங்களை கொண்டு யாகம் வார்க்கப்பட்டு பூர்ணாஹதி நடைபெற்றது. திருக்கல்யாணத்தின் நிறைவாக எம்பெருமானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. திருக்கல்யாணத்திற்கு வருகை தந்த திரளான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு