நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலி: அழிஞ்சிவாக்கம் செங்கற்சூளைகளில் அதிகாரிகள் ஆய்வு

நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலி: அழிஞ்சிவாக்கம் செங்கற்சூளைகளில் அதிகாரிகள் ஆய்வு
X

அழிஞ்சிவாக்கத்தில் உள்ள ஒரு செங்கற்சூளையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலியாக அழிஞ்சிவாக்கம் செங்கற்சூளைகளில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள செங்கற் சூளைகளில் குழந்தைகளை வேலை வாங்கும் அவலம் என்ற செய்தி நேட்டிவ் நியூஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டதன் எதிரொலியாக அதிகாரிகள் செங்கல் சூளையில் திடீர் ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சி பகுதியில் சுமார் 5க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த செங்கல் சூளைகளில் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டியது செங்கல் சூளை உரிமையாளர்களின் கடமையாக உள்ளது.

இந்த நிலையில் செங்கல் சூளைகளில் குழந்தைகள் வேலை பார்க்கும் அவலம் நீடித்து வருகிறது. செங்கல் சூளைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் வாகனங்களை தள்ளி கொண்டு செல்வதும், அவர்களுடன் செங்கற்களை கொண்டு செல்வது என வேலை பார்த்து வருகின்றனர். குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்த கூடாது எனவும், தொழிலாளர்களின் குழந்தைகளை வேலை வாங்க கூடாது என்ற விதிகளை புறந்தள்ளி செங்கற் சூளைகளில் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் வேலை செய்யும் அவலம் நீடித்து வருவதாகவும் இதன் மீது அரசு அதிகாரிகள் செங்கல் சூளைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளை வேலை வாங்கும் சூளை உரிமையாளர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடிய செய்தி கடந்த 31 ஆம் தேதி அன்று நேட்டிவ் நியூஸ் இணைய தளத்தில் வெளியானது.


இந்தச் செய்தியின் எதிரொலியாக அழிஞ்சிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள செங்கல் சூளையில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வாசுதேவன், பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் டெல்லி ராணி,வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் அருள், ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் துறை சார்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செங்கல் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த செங்கல் தொழிற்சாலையில் பணியாற்றும் குழந்தைகளுக்கு கல்வி, தொழிலாளர்களுக்கு மருத்துவம் வசதி குடித்தண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்து தருகின்றார்களா என வடமாநில தொழிலாளர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் தொழிற்சாலை உரிமையாளர்களை அழைத்து தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை முறையாக செய்து தர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதில் கிராம நிர்வாக உதவியாளர்கள் பாலமுருகன், மாலிக் கான் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். செய்தி வெளியிட்ட நேட்டிவ் நியூஸ் இணையதளத்திற்கு அழிஞ்சிவாக்கம் கிராம பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Tags

Next Story
நைட் 7 மணிக்கு மேல டீ குடிக்க கூடாதாமா?..அப்படி குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வரும்!..டீ பிரியர்களே உஷார்..!