திருவள்ளூரில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

திருவள்ளூரில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி
X

திருவள்ளூரில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடைபெற்றது.

திருவள்ளூரில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு இருசக்கர பேரணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுவரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூண்டி, திருவள்ளூர், கடம்பத்தூர் ஆகிய ஒன்றியங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில்100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு இந்த பேரணியில் கொடுப்போம், கொடுப்போம் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இரும்பு சந்தான உணவை கொடுப்போம் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இருசக்கர வாகனங்களில் கட்டி கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருவள்ளூர் நகர்ப்புறங்கள் முழுவதும் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare