ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுப்பு: நரிக்குறவர் மக்கள் வாக்குவாதம்

ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுப்பு:  நரிக்குறவர் மக்கள் வாக்குவாதம்
X

காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நரிக்குறவ இனமக்கள் 

சோழபுரம் அருகே ஒர்க் காடு பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இடத்தை ஆக்கிரமிப்பு மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கவா நாங்கள் வந்துள்ளோம். எங்களைப் பார்த்தால் இளக்காரமா என 15 ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்த பூர்வீக நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்ததை மீட்டு தர கோரி 50.க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு. அனைவரையும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க கோரி காவல்துறையினருடன் வாக்குவாதம்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே ஒரக்காடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 150-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வசித்து வந்தனர். வேலை மற்றும் வாழ்வாதாரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் தங்கி பிழைப்பை நடத்தி வந்த நிலையில் தங்களது பூர்வீக நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து தங்களை பகுதியில் குடியேற விடாமல் தடுப்பதாக கூறுகின்றனர்.

இதனையடுத்து தங்களுக்கு தங்களது முன்னோர்கள் வசித்து வந்த நிலம் தங்களுக்கு வேண்டுமெனவும் தங்களுக்கு பூர்வீக நிலத்தை மீட்டு தங்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர். அவர்களைஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலுக்குள் காவல்துறையினர் மடக்கி இரண்டு பேர் மட்டும் உள்ளே செல்ல அனுமதித்த நிலையில் அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டுமென காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்திற்குள் நரிக்குறவர் 50.க்கும் மேற்பட்ட மக்களை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்காததால் நாங்கள் என்ன ஆட்சியர் அலுவலகத்திற்கு குண்டு வைக்கவா வந்துள்ளோம் எங்களைப் பார்த்தால் ஏன் இவ்வளவு இளக்காரம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து முக்கிய நபர்கள் மட்டும் உள்ளே அனுமதித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Tags

Next Story
ai marketing future