நகை கடை உரிமையாளரிடம் ரூ.7.50 லட்சம் மர்ம நபர்கள் கொள்ளை

நகை கடை உரிமையாளரிடம் ரூ.7.50 லட்சம் மர்ம நபர்கள் கொள்ளை
X

பைல் படம்.

நகை கடை உரிமையாளரிடம் ரூ.7.50 லட்சம் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பிரகாஷ் (35). இவர் திருவள்ளூர் அருகே மணவாளநகரில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு கடையை மூடிவிட்டு 7.50 லட்ச ரொக்கப் பணத்தை பையிலும் 2 லட்சம் ரூபாயை தனது பேன்ட் பாக்கெட்டிலும் வைத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிள் மீது ஏறி வீட்டிற்கு கிளம்பிச் சென்று கொண்டிரந்தார்.

அப்போது மேல்நல்லாத்தூரில் சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளை பொறுமையாக ஓட்டிச் சென்றபோது திடீரென பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் அடகு கடை உரிமையாளர் பிரகாஷை வழி மறைத்து அவர் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பிரகாஷ் மணவாளநகர் காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட போலீசார் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற அடகு கடை உரிமையாளரை தாக்கி ₹. 7.50 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபரை காவல்துறையினர் வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!