பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் தொழிலாளி மர்ம உயிரிழப்பு

பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் தொழிலாளி மர்ம உயிரிழப்பு
X

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.

பெரியபாளையம் அருகே தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த வடமதுரை கிராமத்தில் வசிப்பவர் வில்சன் (வயது 43) இவருக்கு திருமணம் ஆகி அஞ்சலி என்ற மனைவியும் ஆகாஷ், ரித்தீஷ் என்கின்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், பெரியபாளையம் அருகே ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் வில்சன் சுமார் 13 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார் .

நேற்று காலை வில்சன் வழக்கம்போல் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்றதாகவும், மதியம் அவரது அண்ணன் முறையான செல்வசிகாமணிக்கு வந்த செல்போன் அழைப்பில், பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மதியம் 2:50 மணிக்கு போன் செய்து உங்களது சகோதரர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.

இந்த தகவலை அடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தபோது உயிரிழந்து கிடந்த வில்சனைக் கண்டு கதறி அழுதனர்.

வழக்கம்போல் காலை வேலைக்கு சென்றவர் தொழிற்சாலையில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தால் கூட உறவினர்களுக்கு முதலில் எந்த தகவளும் கூறாமல் மருத்துவமனைக்கு எடுத்து வந்து பின்னர் மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிப்பதாகவும், வில்சன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவமனை நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மருத்துவமனைக்கு விரைந்து வந்த பெரியபாளையம் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் உறவினர்களும் சமரசம் பேச்சு வர ஈடுபட்டு பின்னர் உடலை மீட்டு திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் கேட்டபோது பதில் கூறாமல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கிளம்பி சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!