மீஞ்சூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முப்பெரும் விழா

மீஞ்சூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
வல்லூர் ஊராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாய் திரள்வோம் வல்லூர் முகாம் சார்பில் தொல். திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு, கொடியேற்றுதல்,நல திட்ட உதவிகள், தெருமுனை கூட்டம், உள்ளிட்ட முப்பெரும் விழா வல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மா.உமாபதி தலைமை வகித்தார், பொறியாளர் அணி இணை செயலாளர் வல்லூர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆவண மைய மாநில துணைச் செயலாளர் சி. நீலமேகம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் தளபதி சுந்தர், திருவள்ளூர் நாடாளுமன்ற செயலாளர் நெடுஞ்செழியன் பொன்னேரி தொகுதி செயலாளர் சேகர், வல்லூர் ரவிமணி, நாதன், வடிவேல்,மனோ, குமரவேல், மோத்தி, லலிதா,தேசியதிலகம் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் துவக்கமாக வல்லூரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினனர்.
அதனைத் தொடர்ந்து வட சென்னை அனல் நிலைய சாலை, வல்லூர்சாலை, உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் கிராமத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டன, அதனை தொடர்ந்து பேசியவர்கள் அண்ணல் அம்பேத்கருக்கு அடுத்தபடியாக திருமாவளவன் ஒடுக்கப்பட்ட,விளிம்பு நிலை சமுதாயத்திற்காக சிறப்புடன் பணியாற்றி வருகிறார் என்றும், ஏழை எளியோர்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டி அரவணைத்து வருகிறார் என்றும்,அவரின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நாம் அனைவரும் துணை நின்று செயலாற்ற வேண்டுமென பேசினர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை வல்லூர் முகாம் சார்பில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ரா. வினாயகமூர்த்தி, முகாம் அமைப்பாளர் சா.ஆனந்த், ரண.பரணிதரன், நாகலிங்கம் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.
இதில் வி.எஸ்.பாஸ்கரன், ஆர். மாரிசன், சாமுவேல்,ஸ்ரீதர், ராகேஷ்,உதயா உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu