பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி தாய் வீட்டு சீதனம்
Bhavani Amman Temple - திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது புகழ்பெற்றபவானி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆடி மாத திருவிழாவானது 14 வாரங்கள் வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா ,கர்நாடகா, புதுச்சேரி ,தெலுங்கானா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சனி,ஞாயிற்றுக்கிழமை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதி எடுத்து தங்கி மொட்டை அடித்து ஆடு ,கோழி என பலியிட்டு கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேப்பந்தலை ஆடைகளை அணிந்து கோவில் சுற்றி வலம் வந்து பவானி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் ஆடி மாத3 வது வார ஞாயிற்றுக்கிழமை திருவிழாவை முன்னிட்டு நான்கு கிராம மக்கள் அம்மனுக்கு தாய் வீட்டு சீர்வரிசைகளை கொண்டு செல்லும் நிகழ்ச்சி ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகிறது. இதனையடுத்து நேற்று பெரியபாளையம் சுற்றி உள்ள பெரியபாளையம் அம்பேத்கர் நகர், தண்டு மாநகர்,ராள்ளபாடி, அரியபாக்கம், உள்ளிட்ட 4. கிராமமக்கள் பல்வேறு ரூபங்களில் பவானி அம்மனை வடிவமைத்து டிராக்டரில் வைத்து அலங்காரம் செய்து நான்கு கிராம பெண்கள் பொங்கல் மற்றும் கூழ் பானைகளை தலையில் சுமந்து மேள தாளங்கள் முழங்க பவானி அம்மன் கோயிலுக்கு சென்று தாய் வீட்டு சீதனமாக கொண்டு வந்த சீர் வரிசைகளான புடவை ,மஞ்சள் ,குங்குமம் வளையல் ,பூக்கள், பழங்கள் ,என அம்மனுக்கு செலுத்தினர். கிராம மக்கள் ஆலயத்தின் மரியாதை பெற்று அம்மனை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu