திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை மையம் :அமைச்சர் துவக்கம்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 கோடியே 30 லட்சம் மதிப்பில் அதி நவீன அறுவை சிகிச்சை மையத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
Modern Operation Theater Inauguration
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் அரசு செவிலியர் கல்லூரிகள் கொண்டுவர ஒன்றிய அரசிடம் கேட்டிருப்பதாகவும் விரைவில் வர வாய்ப்பு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 கோடியே 30 லட்சம் மதிப்பில் அதி நவீன அறுவை சிகிச்சை மையம் திறந்து வைத்த பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர்.திருவாரூர் அரசு மருத்துவமனை மற்றும்சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்கான மையங்கள் உருவாக்கப்பட்டது போல் மேலும் 36 மாவட்டங்களில் உள்ளஅரசு மருத்துவமனையில் படிப்படியாக இருதய அறுவை சிகிச்சைக்கான மையங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
திருவள்ளூர் மருத்துவமனையில் கடந்த இரண்டரை ஆண்டுகள் முன்பாக அரசு மருத்துவமனையில் புறநோயளிகல்வருகை 1000 இருந்தது.தற்போது புறநோயளிகள் எண்ணிக்கை2500 ஆக உயர்ந்துள்ளதாகவும். தினந்தோறும் உள் நோயாளிகள் எண்ணிக்கை 500 முதல் 600 ஆக இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பொருத்தவரை மாதம் 750 முதல் 800 வரை நடைபெற்று வருவதாகவும்.
தினந்தோறும் பிரசவம் 25 முதல் 30 மருத்துவமனையில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருவதாகவும் அரசு மருத்துவமனையில் 17.77 கோடி மதிப்பில் அதிநவீன 8 புதிய அறுவை சிகிச்சை அரங்கங்கள் .52 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் மகப்பேறுக்காக 12 படுகை கொண்ட உயர் சர்வு தீவிர சிகிச்சை ஒரு அமைப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளதால்.இனி மேல் சிகிச்சைக்காக சென்னை செல்ல தேவையில்லை என அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu