திருவள்ளூரில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்கா திறந்த எம்எல்ஏ
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட எம்ஜிஎம் நகர், ஏ எஸ் பி நகரில் ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்காவை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு மற்றும் 13-வது வார்டில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்கா திறப்பு விழா இன்று பகல் 12 மணியளவில் நடைபெற்றது.
திருவள்ளூர் நகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.எம் நகரில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன், நிர்வாகிகள் வி. எஸ்.நேதாஜி, கமலக்கண்ணன், டி.எம்.ரவி, கவுன்சிலர்கள் வசந்தி வேலாயுதம், சாந்தி கோபி, செல்வகுமார், பிரபாகரன், அயூப் அலி, தாமஸ் (எ) ராஜ்குமார், தனலட்சுமி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
11-வது வார்டு உறுப்பினர் வழக்கறிஞர் வி.இ.ஜான் அனைவரையும் வரவேற்றார். இதில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து பூங்காவில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
அதனையடுத்து திருவள்ளூர் நகராட்சி 13-வது வார்டு ஏஎஸ்பி நகரில் ரூ.33.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவையும் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.
இதில் நிர்வாகிகள் 13 வது வார்டு உறுப்பினர் பத்மாவதி ஸ்ரீதர், நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகராட்சி பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் சரவணன் உட்பட திமுக நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu