அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மனு அளித்த எம்எல்ஏ கிருஷ்ணசாமி

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மனு அளித்த எம்எல்ஏ கிருஷ்ணசாமி
X
பூவிருந்தவல்லி: அடிப்படை வசதிகளை கட்டமைத்து தர திருவள்ளூரில் எம் எல் ஏ கிருஷ்ணசாமி கலெக்டரிடம் மனு

பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதியில் அடிப்படை வசதிகளை கட்டமைத்து தர திருவள்ளூரில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஷை நேரில் சந்தித்து தொகுதியின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற கோரி மனு வழங்கினார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் தேசிங்கு, அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன், ஒன்றிய கவுன்சிலர் எத்திராஜ், கோடு வள்ளி ஊராட்சி மன்ற தலைவர் குமார் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!