ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு தண்ணீர் பந்தலை துவக்கி வைத்த எம்எல்ஏ

ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு தண்ணீர் பந்தலை   துவக்கி வைத்த எம்எல்ஏ
X

தண்ணீர் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏ துரை சந்திரசேகர் 

திருவள்ளூரில் ராஜீவ் காந்தி 33. ஆம் நினைவு நாளை முன்னிட்டு தண்ணீர் பந்தல் எம் எல் ஏ துரை சந்திரசேகர் துவக்கி வைத்தார்.

திருவள்ளூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33.ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தண்ணீர் பந்தலை பொன்னேரி எம்எல்ஏ துரை. சந்திரசேகர் திறந்து வைத்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33.ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் எல் ஐ சி அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நகரத் தலைவர் பிரேம் ஜோஷி ஆனந்த் ஏற்பாட்டில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி பழச்சாறு, உள்ளிட்ட குளிர்வகை பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

அதனை தொடர்ந்து பெரிய குப்பம் ரயில் நிலையம் அருகே ஏழை எளிய மக்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது.

முன்னதாக நாட்டில் அமைதி, ஒற்றுமை, மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு கேடு விளைக்கும் பிரிவினைவாத சக்திகள் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள்,ஆனந்த், அஸ்வின்,சம்பத் கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள், தளபதி மூர்த்தி, செல்வம், பிரபாகர், மாயாண்டி, ஏ கே அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story