வேலைக்கு சென்ற மகள் மாயம்; தந்தை போலீசில் புகார்

வேலைக்கு சென்ற  மகள் மாயம்; தந்தை  போலீசில் புகார்
X
காக்களூருக்கு சென்ற 22 வயது மகள் மாயமானதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் வீரன் (41) இவரது மகள் பிரியா (22). இவர் திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 8.5.2021 அன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்திலும் தொழிற்சாலையிலும் கேட்ட போது இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீரன் நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!