தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள், நிர்வாகத்துடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் நாசர் தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Tiruvallur District Collector -திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன்.ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆவினில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள டிலைட் பாலை பொதுமக்கள் 90 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்காமலே பயன்படுத்தலாம். ஏனென்றால் மழைக்காலங்களில் மின்சாரம் தடைபட்டாலும் அவர்கள் அத்தகைய பாலை பயன்படுத்தலாம்.இந்த பால் வகையில் எந்தவித கெமிக்கல் பொருட்களும் சேர்க்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க உடலுக்கு ஆரோக்கியமான பால் தான்.
இதேபோன்று வெளிநாட்டுக்கு சேலத்திலிருந்து ஆவினில் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படும் பால்கள் கூட பல நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்காமலே அது கெடாமல் மக்கள் பயன்படுத்த அனுப்பப்பட்டு வருகிறது. ஆவினில் விற்கப்படும் பொருட்கள் அனைத்தும் வியாபாரத்திற்காக செய்யப்படுவதில்லை பொதுமக்கள் சேவைக்காக விற்பைன செய்யப்பட்டு வருகிறது.வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டாலும் தங்கு தடையின்றி பொது மக்களுக்கு பால் விநியோகம் செய்யப்படும் என்றார்.
மேலும் கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சென்னையில் கால்வாய்கள் சரியாக தூர்வாராததாலும் பேரிடர் மேலாண்மை இயங்காதாலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அவர்கள் முன்னறிவிப்பு இன்றி கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டதின் விளைவாக 18 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு குடிபெயர்ந்ததாகவும். மியாட் மருத்துவமனையில் தண்ணீர் முழுகி 18 பேர் உயிரிழந்தது கூட அ.தி.மு.க. அரசு மூடி மறைத்ததாகும் அவர் குற்றம் சாட்டினார்.அப்போது கால்நடைகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்ததாகவும் 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தின் போது பால் ஒரு லிட்டர் விலை 150 முதல் 200 ரூபாய் வரை அ.தி.மு.க. ஆட்சியில் விற்றதாகவும்.பிரட் பாக்கெட் ஒன்றின் விலை 150 ரூபாய்க்கு விற்றதாகவும் தி.மு.க. ஆட்சியில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பேரிடர் மேலாண்மை கூட்டம் கூட்டி முதல்வர் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டதன் விளைவாக சென்னையில் பல்வேறு இடங்கள் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாகவும் இயற்கை பேரிடரை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. முதல் அமைச்சர் உத்தரவின்படி பருவமழை சேதங்களை எதிர்கொள்ள அனைத்து துறை சார்ந்தவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் நாசர் கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu