ஊத்துக்கோட்டையில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை அமைச்சர் ஆர்.காந்தி திறப்பு
ஊத்துக்கோட்டையில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சொர்ணவாரி பருவம் 2023 - 2024 ஆண்டிற்கான துவக்க விழா மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெறறது.
இந்த விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, விவசாயிகளிடமிருந்து கொண்டு வரப்பட்ட நெல்களை தூற்றும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து, அரசு விதிகளுக்குட்பட்டு நெல்கொள்முதல் செய்யும் பணிகளை துவக்கி வைத்து. விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேளாண்மை சார்ந்த வளர்ச்சியையும், விவசாயிகளையும் ஊக்குவிக்குவிக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் ஒதுக்கிய ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் ஆர்.காந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அலுவலர்கள், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.ஏபி. சிவாஜி,
எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜே.மூர்த்தி, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வசந்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி. லோகேஷ், ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் அபிராமி குமரவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் என பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu