அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் திடீர் ஆய்வு
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு மேற்கொண்டார் : மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர்கள் மீது புகார் வந்துள்ளதாகவும் விசாரணை அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அப்போது எச்சரிக்கை விடுத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய் பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு வகுப்பறையில் இருந்த மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாணவிகளுக்கு எந்த சப்ஜெக்ட் பிடிக்கும் பத்தாம் வகுப்பு தேர்வில் எவ்வளவு மார்க் எடுப்பீர்கள் எனவும் கேட்டறிந்த அமைச்சர் கயல்விழி மாணவர்கள் வைத்திருந்த நோட்டு புத்தகங்களை வாங்கி ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்தியுள்ளனர் என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும் பத்தாம் வகுப்பறையில் போர்டில் எழுதப்பட்டிருந்த ஆயுத எழுத்து என்பதற்கு பதிலாக ஆயுதம் எழுத்து எழுதப்பட்டிருந்ததை பார்த்த அமைச்சர் இதை யார் எழுதியது ஆயுதம் எழுத்து அல்ல ஆயுத எழுத்து என மாற்றி எழுத அறிவுறுத்தினார்.
மேலும் வகுப்பறையில் இருந்த காலி பெயிண்ட் டப்பாக்களை உடனடியாக அகற்றவும் மாணவர்களுக்கு காற்றோட்டமான வகுப்பறை உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஜன்னல்களை திறந்து விடுவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் எனவும் தலைமை ஆசிரியருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
பின்னர் தலைமை ஆசிரியர் அறையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் போர்த்திய பொன்னாடையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் ஆதிதிராவிட முன்னாள் அலுவலரிடம் சுமார் பத்து நிமிடங்கள் அறையை மூடிக்கொண்டு விசாரணை மேற்கொண்டார்.
மேலும் அந்த விசாரணையில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட இரண்டு ஆசிரியர்கள் குறித்து குழந்தைகள் நல அலுவலர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விசாரணை எவ்வாறு செல்கிறது ஆசிரியர்கள் உண்மையாகவே தவறு செய்தார்களா அவருக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கலாம் என்பது குறித்து ஆதிதிராவிட நலத்துறை அலுவலரிடம் அமைச்சர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை ஆய்வு செய்ததாகவும், தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளும் பணி தொடரும் எனவும் தெரிவித்த அமைச்சர், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொண்டது குறித்து புகார் வந்துள்ளதாகவும், விசாரணையின் அடிப்படையில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu