திருவள்ளூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் நாசர்

திருவள்ளூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் நாசர்
X

திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் நாசர் 

தமிழக முதல்வர், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார் -அமைச்சர் நாசர்

தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற எண்ணற்ற திட்டங்களை தீட்டி அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்தார்

திருவள்ளுர் மாவட்டம், திருவள்ளுர் நகராட்சிக்குட்பட்ட எம்.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விழாப் பேருரையாற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கி, தெரிவித்ததாவது :

முந்தைய காலங்களில் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டிருந்தவர்களை ஊனமுற்றோர் என அழைக்கப்பட்டு வந்தனர். ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றி மாற்றுத்திறனாளிகள் என அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, அதை சட்ட வடிவமாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆவார். அவர் வழியில் தமிழகத்தை வழிநடத்தி; ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற எண்ணற்ற திட்டங்களை தீட்டி அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தியும் வருகிறார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையின்போது உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது தீர்வுக்காண ஆட்சி பொறுப்பேற்ற உடன் "உங்கள் தொகுதியில் முதல்வர்" என்ற துறையயை உருவாக்கி, அந்த துறைக்கு சிறப்பு அலுவலரை நியமித்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

அதனடிப்படையில், திருவள்ளுர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் துறையின் கீழ் மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5,13,660 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மடக்கு சக்கர நாற்காலி, காதொலி கருவி, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருவள்ளுர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 31,400 நபர்களுக்கு அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 7,213 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 8,54,57,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 1,288 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பாக 1,109 பயனாளிகளுக்கு ரூ. 1,18,86,981 மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரிய திட்டத்தின் கீழ் 32 பயனாளிகளுக்கு ரூ. 3,88,500 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளுர் மாவட்டத்தில் 35 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.76,500 வீதம் ரூ.26,77,500 மதிப்பீட்டிலான இணைப்புச் சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை கட்டுவதற்கான தலா ரூ.35,000 வீதம் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,75,000 மதிப்பீட்டிலான பணி ஆணைகளும் வழங்கப்படுகிறது. இதனை அனைத்து மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் முழுமையாக பயன்படுத்தி பயனடையயுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்ற சிலம்பம், நடனம், பாட்டு, கர்நாடக இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!