இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நாசர் உறுதி

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி:  மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நாசர் உறுதி
X

ஆரணியாற்றில் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலத்தை நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர் 

தண்ணீரில் மூழ்கிய தரை பாலத்தை அமைச்சர் நாசர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்..

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலத்தை நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர் 20கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம், காரணி, மங்கலம், உள்ளிட்ட 10 ருக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் இவர்கள் கிராமங்களுக்கு அருகே ஆரணி ஆறு செல்கிறது

இப்பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 ஆண்டு காலமாக இந்த ஆற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள தரைப்பாலத்தை கடந்து தான் சென்று வந்தனர். மழை காலங்களில் மழைநீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும்போது, அப்பகுதி மக்கள் ஆற்று கடந்து செல்ல மிகவும் இன்னலுக்கு ஆளாகினர். இது குறித்து பலமுறை அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் ஆந்திராவில் இருந்து வரும் மழைநீர் காரணமாக ஆரணியாற்றில் நீர்வரத்து வர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஆரணியின் அருகே காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதே போல மங்களம் கிராமத்திற்கு செல்ல ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த பாதையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஆற்றில் சுமார் 1 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்லும் நிலையில் பொதுமக்கள் வேறு வழி இன்றி ஆபத்தை பொருட்படுத்தாமல் சிரமத்துடன் ஆற்றை கடந்து செல்கின்றனர். பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் தண்ணீரில் சிரமத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.

இதுகுறித்து முதன்முதலாக நமது இன்ஸ்டாநியூஸ் தளத்தில் கடந்த 3ஆம் தேதி அன்று செய்தி வெளியிடப்பட்டது

இதனையடுத்து, இந்த தகவலறிந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி.சாமு. நாசர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் வந்து புதுப்பாளையம் பகுதியில் நீரில் மூழ்கிய தரைப்பாலத்தை ஆற்றின் வெள்ள நீரில் இறங்கி தரைப்பாலத்தில் வழிந்தோடும் நீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சரிடம் அந்த பகுதி பொதுமக்கள், மழை மீண்டும் அதிகரித்தால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும் எனவும் காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக சுமார் 10 கிமீ தூரம் சுற்றி வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆற்றில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று அமைச்சர் நாசரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அமைச்சர் நாசர் கூறுகையில், ஆரணியாற்றை தடையின்றி கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி உமா மகேஸ்வரி, எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜே.மூர்த்தி, செயற்பொறியாளர் (ஆரணி ஆறு) வடிநில சென்னை கோட்டம் ஜெயக்குமாரி, உதவி பொறியாளர் புவனேஸ்வரி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கே.ஆண்டி, மற்றும் சாலை ஆய்வாளர்கள் சுந்தர், திருமால், மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் என பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil