அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய அமைச்சர் காந்தி
மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு 17391 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.8.38 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 127 பள்ளிகளில் பயிலும் 17391 மாணவ மாணவியர்களுக்கு ரூ.8,38,51,460 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை மணவாளநகர் கே.இ.என்.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.சட்டமன்ற உறுப்பினர்கள் வி,ஜி, ராஜேந்திரன் ( திருவள்ளூர்), எஸ், சந்திரன் (திருத்தணி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு நிதிநிலை அறிக்கையில் அதிக அளவில் நிதி ஒதுக்கிடு செய்து மாணவ, மாணவியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் இன்றைய தினம் மணவாளநகர் கே.இ.என்.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11அம் வகுப்பு பயிலும் 308 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை 127 அரசு மேல்நிலைப் பள்ளிகளில்7645 மாணவர்களுக்கும் 9746 மாணவிகளுக்கு ஆக மொத்தம் 17391 மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவருக்கு ரூ.4900 மதிப்பிலும், ஒரு மாணவியருக்கு ரூ.4760 மதிப்பிலும் என மொத்தம் ரூ. 8,38,51460 மதிப்பில் வழங்கப்படுகிறது என கைத்தறி மாற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவி சந்திரன் தலைமையாசிரியர் ஞானசேகரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் சுகானந்தம் (திருவள்ளூர்) புண்ணியகோடி (பொன்னேரி) மற்றும் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu