பள்ளி கட்டிடங்கள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளி கட்டிடங்களின் வரைபடங்களை பார்வையிடும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றிருப்பதற்கு நண்பனாகவும் கட்சியின் தொண்டனாகவும் பெருமைபடுகிறன் என திருவள்ளூரில் புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருவள்ளூர் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு பள்ளி கட்டிடங்களின் கட்டுமான பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சக அமைச்சராக இருந்த உதயநிதி தற்போது தங்களுக்கான கண்காணிப்பு அதிகாரியாக பதவி ஏற்று உள்ளதாகவும் .துணை முதலமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக ஆய்வுக் கூட்டம் செல்வதால் அவரிடம் வாழ்த்து தெரிவித்ததாகவும்.அப்போது அவர் புதுசாக ஆய்வு கூட்டத்திற்காக செல்கிறேனா என கலகலப்பாக தன்னிடம் கேட்டதாகவும் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று மழைக்காலம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க. முதல் ஆய்வு கூட்டம் செல்வதால் வாழ்த்துக்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேகம் எடுக்கிறார். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் நாங்களும் உழைத்து கொண்டு இருப்போம் என்றார்.
கல்விக்கான நிதியை ஒதுக்கக்கோரி ஒன்றிய அரசிடம் துறையின் அமைச்சராக இரண்டு முறையும் முதலமைச்சரும் நேரிலும் சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளதாகவும். கல்விக்கான நிதி ஒதுக்குவதில் தயவுசெய்து ஒன்றிய அரசு அரசியல் பார்க்கக் கூடாது என்றார். 45 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் 15 ஆயிரம் ஆசிரியர்கள் வாழ்வாதாரம் 32298 ஊழியர்களின் எதிர்காலம் என எல்லாவற்றையும் வலியுறுத்தி உள்ளதாகவும் ஆனால் ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையிலே பிடிவாதமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாம் என்றுமே மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாத மாநிலமாக இருந்து வருவதாகவும்.அத்தகைய கொள்கை பிடிப்போடு தான் தமிழக முதலமைச்சரும் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கல்விக்கான நிதியை கேட்கும் போது ஒன்றிய அரசிடம் சரியான பதில் வரவில்லை பதிலுக்காக காத்துக் காத்துக் கொண்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்போது உடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu