திருவள்ளூர்: பேருந்து கட்டணம் ஆண்களுக்கு ரூ10 உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்

திருவள்ளூர்: பேருந்து கட்டணம்  ஆண்களுக்கு ரூ10 உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்
X
திருவள்ளூரிலிருந்து இயங்கும் மகளிருக்கு இலவச பேருந்தில் ஆண்களுக்கு குறைந்த பட்சம் கட்டணமாக ரூ10 வசூலிக்கப்படுவதாக புகார்

திருவள்ளூரிலிருந்து இயங்கும் மகளிருக்கு இலவச பேருந்தில் ஆண்களுக்கு குறைந்த பட்சம் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்தது. நகரப்புற பேருந்துகளை விட புறநகர் பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்றும் நகர்ப்புற பேருந்துகளில் மட்டும்தான் இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்ற பலகை வைக்கப்பட்டு அதில் பயணிக்கும் மக்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால் குறைந்தபட்ச கட்டணமாக அதில் பயணிக்கும் ஆண்களுக்கு 5 ரூபாய்க்கு பதில் 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் இது போன்ற விதிமீறல்கள் சர்வசாதாரணமாக திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ராமஞ்சேரி, காஞ்சிபாடி, திருவலங்காடு மற்றும் ஸ்ரீ பெரம்பத்தூர் வழித்தடங்களை நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன. இதனையடுத்து சிறுவல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மகளிர் இலவசம் என்ற பேருந்தில் உள்ள நடத்துநரிடம் நேரடியாக விசாரித்தபோது குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்க தான் நிர்வாகம் தெரிவித்திருப்பதாகவும், 5 ரூபாய் கட்டணம் வசூலிக்க எந்த அரசாணயும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!