வடமதுரையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்

வடமதுரையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்
X

பெரியபாளையம் அருகே எம்.ஜி.ஆர்.பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் எம்.மகேந்திரன் தலைமையில், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

திருவள்ளூர் மாவட்டம், வடமதுரையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை, அதிமுகவினர் உற்சாக கொண்டாடினர்.

மறைந்த அ.தி.மு.க நிறுவன தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். அவர்களின் 105.வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சி அரசு பள்ளி அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எல்லாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமையில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் நிர்வாகிகள் சீனிவாசன் ,செல்வம், பாலாஜி, ராம்தாஸ், ராஜா, சரவணன் தமிழ்மண்னன் குருமூர்த்தி, புஷ்பராஜ், நந்தா, விஜி, நாகப்பன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி