மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் கூட்டம்
நினைவேந்தல் கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், மாநில தலைவர் அம்பேத் ஆனந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள். ஒருங்கிணைப்பாளர் திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கத்தில் ஆர்ம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் நடந்தது.
பகுஜன் சமாஜ் கட்சி திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாநிலத் தலைவர் மறைந்த கே.ஆம்ஸ்ட்ராங், பூவை எம்.மூர்த்தியார் ஆகியோர் நினைவேந்தல் கூட்டம் மாவட்டத் தலைவரும் வெள்ளானூர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவருமான வெள்ளானூர் வி.கே. வெங்கட், மேற்கு மாவட்டத் தலைவர் பகுஜன் எம்.பிரேம் ஆகியோர் தலைமையில் செங்குன்றம் அடுத்த தாமரைப்பாக்கம் கிராம கூட்டுச் சாலையில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த அலுவலகச் செயலாளர் அம்பேத் ஆனந்தன், மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் தேவா, வெற்றி வேந்தன், பொருளாளர் செல்வம், வீரா விஜி, மாவட்டத் துணைத்தலைவர் வடகரை என்.ஜானகிராமன், மாவட்டச் செயலாளர் ஜெ.சந்தோஷ்குமார், ஏடிஎஸ் ஆனந்தன், எல்.சூர்யா, மாவட்ட அமைப்பாளர் மீரான் மொய்தீன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.சாந்தி, சார்லஸ், தேவதாஸ், பௌத்த ஜெயபால், பிரம்மையா, அம்பேத் சோபன், சரத், மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் பகுஜன் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டில்லி, சுரேஷ், தீபக், ஏசுதாஸ், மாறன்ராஜ், அமுல்ராஜ், கோகுல் ஆகியோர் பேசினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் பி.ஆனந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு நினைவேந்தல் பேருரையாற்றினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் டி.மைக்கேல்தாஸ், மாநிலச் செயலாளர் புழல் இரா.பெரியாரன்பன், பி.டி.சேகர், பாக்ஸர் திரு, ஹரி, கவி, ரெனிஷ், பாலா, ராஜேஷ், கபிலன், ராஜ், சுரேஷ், ராஜேந்திரன், ஆனந்தகுமார், ஜேம்ஸ், குரு, ராஜேஷ், சரண்ராஜ், சைமன், கார்த்திக், விவேக், அன்புமதி, பாபு, செந்தில், விஜயகுமார், மூர்த்தி, உமாபதி, ஜவகர், அபினாஷ், ஷாகித் குரு உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu