பாஜக சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை ஆய்வு கூட்டம்

பாஜக சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை ஆய்வு கூட்டம்
X

கூட்டத்தில் பேசும் எச்.ராஜா.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை ஆய்வு கூட்டத்தில் எச். ராஜா பங்கேற்றார்.

செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என கூறிய ஸ்டாலின், இப்போது தியாகி என கூறுவது அப்போ பேசியது எந்த வாய்? இப்போ பேசுவது என்ன வாய்? என பாஜகவின் மாநில ஒருங்கிணப்பாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் அஸ்வின் குமார் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி பகுதிகளில் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் ஊடுருவியுள்ளனர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் எனவும், இறையாண்மைக்கு ஆபத்து எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் நாள்தோறும் படுகொலைகள் நடந்து வருவதாகவும், கடந்த வாரத்தில் 6 கொலைகள், சிவகங்கையில் மட்டும் 3 கொலைகள் என தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேலி கூத்தாகியுள்ளது எனவும்,திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏஆர் புட் நிறுவனம் வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும்,
தமிழகத்தில் எந்த கோயில்களிலும் அந்த நிறுவனம் நிரபராதி என தீர்ப்பு வரும் வரை, பொருட்களை வாங்க்க்கூடாது எனவும், அந்த நிறுவனத்தை சேர்ந்தவர் பழனி கோயிலில் தர்க்காராக உள்ளதாக தகவல் எனவும், உடனடியாக அவரை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சினிமா நடிகர்களின் பின்னால் செல்லாதீர்கள் என திமுக அமைச்சர்கள் கூறுவது, உதயநிதி பின்னால் போகாதீர்கள் என வெளிப்படையாக பேச முடியவல்லை எனவும், விஜயின் மாநாட்டுக்கு நன்றி எனவும், திமுகவின் திட்டங்களை பிரதிபலிக்கும் காரணத்தால், விஜய் எடுக்கும் ஒவ்வொரு ஒட்டும் திமுகவிற்கே போய் சேரும் விதமாக நடந்து கொள்வதாகவும், குளித்தலையில் ஸ்டாலின் பேசிய போது, திமுக ஆட்சி அமைந்ததும் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் எனவும், பகவானே பார்த்து அதை தான் செய்துள்ளார் எனவும், இப்போது தியாகி என பேசுவது, திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேல் கூறுவதைப் போல் ‌ அது நாற வாய் இது நல்ல வாய்எனவும், நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!