தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம்

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம்
X

புழல் மத்திய சிறையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புழல் மத்திய சிறையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் மத்திய சிறையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் சிறப்பாக தண்டனை சிறையில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் அம்ரேஷ் புஜாரி மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். இதில் சுமார் 30மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு தண்டனை மற்றும் மகளிர் சிறையில் உள்ள கைதிகளுக்கு பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த சிகிச்சை அளித்தனர்.

சுமார் ஆண், பெண் என சுமார் 550.கைதிகள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!