மீஞ்சூர் ஏகாம்பரநாதர் தேர் திருவிழா: எம்எல்ஏ நேரில் ஆய்வு

மீஞ்சூர் ஏகாம்பரநாதர் தேர் திருவிழா:  எம்எல்ஏ நேரில் ஆய்வு
X

மீஞ்சூரில் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற உள்ள தேர் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆய்னு செய்த எம்எல்ஏ.

மீஞ்சூரில் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற உள்ள தேர் திருவிழா ஏற்பாடுகள் குறித்து எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. வடகாஞ்சி என்றழைக்கப்படும் எந்த திருக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா (26ஆம் தேதி) நாளை கொடியேற்றத்துடன் துவங்கி, 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 14நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில் 7ஆம் நாள் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற உள்ளது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாடவீதிகளில் வலம்வர உள்ள தேரோட்டத்தை பாதுகாப்பாக நடத்துவது குறித்து பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தேர் வலம் வரும் வீதிகளில் உள்ள சாலைகளின் அமைப்பு குறித்து நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மாட வீதிகளில் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள், வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு வயர்கள் ஆகியவற்றை தேரோட்ட நாளில் துண்டித்து அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி பாதுகாப்பாக தேரோட்டத்தை நடத்தி, தேர் பவனிக்கு பிறகு மீண்டும் மின் இணைப்புகளை வழங்குவது குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் அப்போது அதிகாரிகளிடம் எம்எல்ஏ கேட்டறிந்தார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்