தீ விபத்து ஏற்பட்ட மணவாளநகர் துணை மின் நிலையம்: திருவள்ளூர் எம்எல்ஏ ஆய்வு!

தீ விபத்து ஏற்பட்ட மணவாளநகர் துணை மின் நிலையம்: திருவள்ளூர் எம்எல்ஏ ஆய்வு!
X

தீ விபத்து ஏற்பட்ட மணவாளநகர் துணை மின் நிலையத்தை திருவள்ளூர் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

தீயினால் பாதிக்கப்பட்ட மணவாளநகர் துணை மின் நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மணவாளநகர் துணை மின் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மின்கசிவின் காரணமாக தீ பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் தீயினால் பாதிக்கப்பட்ட மணவாளநகர் துணை மின் நிலையத்தில் நேரில் சென்று பார்வையிட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்